இந்தாண்டு ரூ.27 கோடி வரி வசூல்
Update: 2023-12-29 06:56 GMT
திண்டுக்கல் மாநகராட்சியில் கடை வாடகை ,சொத்துவரி,குடிநீர் கட்டணம்,தொழில் உள்ளிட்டவைகளின் வரியாக 2023ல் ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் எஸ்.விஜயராகவன் தெரிவித்தார். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், காந்திமார்க்கெட், பூ மார்க்கெட்,ரோட்டோரக்கடைகள் என நகர் முழுவதும் 997 கடைகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இங்குள்ள வியாபாரிகள் மாத வாடகை , வருடாந்திர வாடகை செலுத்தி கடைகளை வாடகைக்கு பெறுகின்றனர். வியாபாரிகள் வாடகையை முறையாக செலுத்துகிறார்களா.. ரூ.லட்சக்கணக்கில் பாக்கிகள் உள்ளது. 12 வரி வசூலிக்கும் ஊழியர்கள் மூலம் வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.