குமாரசாமிப்பேட்டையில் 2ம் கட்ட பாதாளா சாக்கடை திட்டம் பூமிபூஜையுடன் துவக்கம்

குமாரசாமிபேட்டை பகுதியில் நகராட்சியில் ரூ.64.58 கோடியில் 2ம் கட்ட பாதாளா சாக்கடை திட்டம் பூமிபூஜையுடன் பணி தொடங்கியது.

Update: 2024-02-25 05:53 GMT
தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் ஏற்கனவே 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2010ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. 14 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாமல் இருந்தது. இந்நிலையில் தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்த 14 வார்டுகளில் இத்திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி நேற்று தமிழ்நாடு காலநிலை மாற்றியமைக்கும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தர்மபுரி நகராட்சியில் புதியதாக பாதாள சாக்கடை திட்டம் பகுதி -2 ரூ.64.58 கோடி மதிப்பீட்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து தர்மபுரியில் பென்னாகரம் சாலையில் தர்மபுரி நகராட்சி நிர்வாகம் சார்பில் 2ம் கட்ட பாதாளா சாக்கடை திட்டத்திற்கான பூமிபூஜை நடந்தது. தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை வகித்தார். நகரமன்ற துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், பொறியாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஜெகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தர்மபுரி நகர திமுக செயலாளர் நாட்டான் மாது, கவுன்சிலர்கள் சத்யா முல்லைவேந்தன், செல்வி சுருளி, சமியா ராஜா, சம்மந்தம், மோகன், திமுக நிர்வாகிகள் அழகுவேல், காசிநாதன்,கனகராஜ், ரஜினிரவி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News