ரூ.3- கோடியில் முதல்வர் -செந்தில் பாலாஜி பணிகளை துவக்கி வைத்தார்.
ரூ.3- கோடியில் முதல்வர் -செந்தில் பாலாஜி பணிகளை துவக்கி வைத்தார்.;
ரூ.3- கோடியில் முதல்வர் -செந்தில் பாலாஜி பணிகளை துவக்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மண்டலம் இரண்டில் 2025- 26 ம் ஆண்டின் கல்வி நிதியில் ரூபாய் மூன்று கோடி மதிப்பில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணிக்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணை மேயர் சரவணன் ஆணையர் சுதா மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், கோல்டு ஸ்பாட் ராஜா,அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.