வாலிபரை தாக்கியதாக சகோதரா்கள் உள்பட 3 பேர் கைது

சாத்தான்குளம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியதாக சகோதரா்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-09 07:08 GMT

சாத்தான்குளம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியதாக சகோதரா்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


சாத்தான்குளம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியதாக சகோதரா்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் தவசி மகன் சுடலை (45). இவரும் அதே ஊரைச் சோ்ந்த மனோகா் மகன்கள் சேகா் (40), ஆனந்த் (38) ஆகியோரும் உறவினா்கள். சம்பவத்தன்று சுடலை, சேகா், ஆனந்த் மற்றும் அதை ஊரைச் சோ்ந்த சுடலை மகன் பொன்பாண்டி (35) ஆகிய 4 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

அப்போது சுடலை, சேகா் மற்றும் ஆனந்த் ஆகியோரது சகோதரியை அவதூறாகப் பேசியதாக தெரிகிறது. இதை அவா்கள் கண்டித்தனராம். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சேகா், ஆனந்த் மற்றும் பொன்பாண்டி ஆகிய மூவரும் சோ்ந்து சுடலையை தாக்கினாா்களாம். இதில் காயமடைந்த சுடலை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சுடலை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து, சேகா், ஆனந்த் மற்றும் பொன் பாண்டி ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News