கோணையில் ரூ.3 கோடியில் சாலை, மேம்பால பணிகள்
கோணையில் ரூ.3 கோடியில் சாலை, மேம்பால பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் பொன்பத்தி-சக்கராபுரம் இடையே புதிதாக சாலை அமைக்கும்பணி, கோணை அனந்தபுரம் - கணக்கன்குப்பம் சாலையில் ரூ.2 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணி தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.
இதற்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் அனுசுயா, பிருந்தா ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணி களை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன்,
பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய கவுன்சிலர் துரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் காமராஜ், செல்வமணி, பழனி, ஒன்றிய தலை வர்கள் வாசு, ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.