போதைப்பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் மினிவேனில் போதைப்பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-02 10:00 GMT
திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து ,அவர்களிடம் இருந்து 1,875 ஹான்ஸ், கூலிப் பாக்கெட்டுகள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.