ரூபாய் 3 லட்சம் பணம் பறிமுதல்
சிவகங்கை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூபாய் 3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-04-13 05:29 GMT
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி ராமலிங்கபுரம் விலக்கு பகுதியில் சிவகங்கை மண்டல துணை வட்டாட்சியர் சங்கர் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒக்கூர் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சரவணன் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 3 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவுலகத்தில் ஒப்படைத்தனர்