பல்லடம் அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் கைது!

பல்லடம் அருகே பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-11 02:49 GMT
பல்லடம் அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் கைது!

பைல் படம் 

  • whatsapp icon
பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மனைவி சித்ரா (வயது30). இவரது வீட்டின் அருகே உள்ள சக்திவேல் (29) மற்றும் அவரது நண்பர்கள் சித்ராவிடம் வாய் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சித்ரா பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுதொடர்பாக பல்லடம் போலிசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், பழனிசாமி (41), லோகேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News