பழிவாங்க நினைத்து மாட்டிக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் - கள்ளச்சாராய வழக்கில் 3 பேர் கைது

வெள்ளகோவிலில் 6.5லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் தயாரிக்க தேவைப்படும் ஊறலை பறிமுதல் செய்த வெள்ளக்கோவில் காவல்துறை மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் மூன்று நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2024-07-05 03:12 GMT

வெள்ளகோவில் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ்(53) ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் ஆட்டோ ஓட்டி வருகையில் மணி என்பவரது மற்றொரு ஆட்டோவில் மோதிவிட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் சமாதான படுத்தி செல்வராஜ் ஆட்டோவை ஒட்டியது தவறு அதனால் மணிக்கு ரூ 5 ஆயிரம் கொடுக்க வைத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் மணியை மாட்டி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் மனோஜிடம்(30) இருந்து கள்ளச்சாராயம் எனும் பட்டை சாராயம் வாங்கி அதை 180 மில்லி லிட்டர் கொண்ட 30 மது பாட்டில்கலாகவும் 1 லிட்டர் பாட்டிலிலும் அடைத்து பெட்டிகளில் வைத்து மனோஜ் மூலமாக மணியின் ஆட்டோவிற்கு போன் மூலமாக வாடகைக்கு வரவைத்து சாராய பாட்டில்களை ஏற்றிவிட்ட பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் இறக்க வேண்டிய இடத்திற்கு செல்வதற்குள் மணி அந்த இடத்திற்கு சென்றுவிட்டு அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் மீண்டும் ஏற்றிய இடத்தில் இறக்கி வைத்துவிட்டு வந்து விட்டார். பின்னர் அடுத்த நாள் காவல்துறையினர் மணியிடம் விசாரணை மேற்கொண்டபோது எங்கு பெட்டிகளை ஏற்றி வந்தேனோ அதே இடத்தில் இறக்கிவைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையிடம் சேனாபதி பாளையத்தில் உள்ள இடத்தையும் காட்டியுள்ளார் அங்கு சோதனை செய்தபோது அந்த இடமானது மனோஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும் இதை அடுத்து மனோஜ் மற்றும் செல்வராஜை பிடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 180 லிட்டர் அளவு கொண்ட 30 மதுபாட்டில்களில் 5.5 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பாட்டிலில் சேர்த்து 6.5 லிட்டர் சாராயமும், சாராயஊரல் 80 லிட்டர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் விசாரணையில் மனோஜின் உறவினர் அருண்(30) என்பவர் பெரிய காங்கயம்பாளையம் பகுதியில் சாராயம் காச்சுவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது அருண் தப்பியோடியதும் அவர் வீட்டில் 20 லிட்டர் சாராயஉறல் இருந்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் சாராய ஊறல் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவங்களில் காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான வெள்ளகோவில் காவல்துறையினர் ஈடுபட்டனர். தலைமறைவான அருணை மதுவிலக்கு ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான காவல்துறையினர் தேடி பிடித்தனர் . 3 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெரியாமல் நடத்த விபத்திற்கு பழிவாங்க நினைத்து தற்போது சாராய வழக்கில் தான் மாட்டிக்கொண்டது மட்டுமில்லாமல் கூட்டாளிகள் இருவரையும் மாட்டிவிட்டது வேடிக்கையாக இருந்தாலும் சாராயம் காச்சுபவனே இதுபோல் வெளியே வந்து கூறினால் மட்டும் தான் காவல்துறையினருக்கு தெரியவரும் போலே உள்ளது என்கின்றனர் பொதுமக்கள் . மேலும் வெள்ளகோவில் பகுதியில் சாராயவழக்கில் 3 பேரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News