ஆலிவலத்தில் ஆடு திருடிய 3பேர் கைது

Update: 2023-11-08 04:09 GMT

ஆடுகள் திருட்டு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவலஞ்சுழி மேலவெளி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த பாலன், திருக்கொள்ளிக்காடு கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் ஆகிய மூன்று நபர்களும் இரு சக்கர வாகனத்தில் இரண்டு ஆடுகளை கொண்டு சென்றனர். அப்போது ரோந்து பணியில் இருந்த ஆலிவலம் காவல் நிலைய காவலர்கள் மூவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஆடுகளை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News