பேராசிரியர் நிர்மலா தேவி உட்பட 3 பேர் ஆஜர்
ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி உட்பட 3 பேர் ஆஜர் ஆகினர்.
Update: 2024-04-29 14:26 GMT
கடந்த 2018 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன் , ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்ட 3 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் ஆஜர். ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில் நிர்மலாதேவி ஆஜராகாததால் நீதிமன்றம் தீர்ப்பை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் பேராசிரியர் நிர்மலாதேவி உட்பட 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். உதவி பேராசிரியர் முருகன்,ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிர்மலா தேவி வழக்கில் அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் பேட்டி.. இந்த வழக்கிலே இன்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இருந்தபோதிலும் முதல் குற்றவாளியை தவிர இரண்டு, மூன்றாம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். தண்டனை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற முதல் குற்றவாளி வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று அதை இன்றே முடிவு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம். எனவே இன்று மதியம் தீர்ப்பு நீதிபதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளிகள் அவர்கள் தொடர்பான அவர்களுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறி உள்ளதால் அவர்கள் விடுதலை ஆகி உள்ளார்கள் .இருந்தபோதிலும் சட்ட நுணுக்கங்கள் கொண்டு மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.