கார் விபத்தில் 3 பேர் படுகாயம்

விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில், தேவகோட்டை, சவேரியார்பட்டினத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர்.;

Update: 2024-05-01 12:48 GMT

 விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில், தேவகோட்டை, சவேரியார்பட்டினத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சவேரியார்பட்டினத்தை சேர்ந்தவர் ரபேன் மனைவி ஜெயராணி (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு சிவகங்கையில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். உடன் அவரது உற வினர்கள் சிவகங்கை வெளியானந்தல் பகுதியை சேர்ந்த மகிமைராஜா (55), சபரியம்மாள் (50) ஆகியோரும் பயணம் செய்தனர். சிவகங்கை சவேரியார்பட்டினத்தை சேர்ந்த ராஜா (28) என்பவர் காரை ஓட்டினார்.

அதிகாலை 2.50 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது 4 வழிகளை கொண்ட அந்த மேம்பாலத்தில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதால் இருமார்க்கத்தில் இருந்து வரும் வாக னங்கள் ஒருபக்க சாலையிலேயே வந்து செல்கின்றன. இதனால் எதிரே சென்னையில் இருந்து வந்த தனியார் சொகுசு பஸ் எதிர்பாராதவிதமாக அந்த கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜெயராணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தார்.

Advertisement

மகிமைராஜா, சபரியம்மாள், டிரைவர் ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி யான ஜெயராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News