புலி நகம், பல் விற்க முயன்ற 3 பேர் கைது

புலி நகம், பல் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்களை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2024-06-30 04:24 GMT
  • whatsapp icon

நீலகிரி மாவட்டம் கூடலூர், நாடுகாணி பகுதிகளில் புலியின் நகம், பல் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாடுகணி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் ஆமைக்குளம் பாண்டியார் குடோன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், சிமியோன் மற்றும் பால்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் புலி நகம், பற்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்த 17 நகங்கள் மற்றும் 4 பற்களை பரிமுதல் செய்யத வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மாலை பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும், நீதிமன்ற காவலுக்காக கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர் . அவர்களிடமிருந்து பரிமுதல் செய்யப்பட்ட நகம் மற்றம் பற்கள் புலியுடையதா ? என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News