லால்குடி அருகே 100 மூட்டை ரேசன் அரிசியை கடத்திய 3பேர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் 100 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-12 15:20 GMT

அரிசி கடத்தியவர்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து 50 கிலோ எடையுள்ள 100 மூட்டை ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டு லால்குடி அருகே திருமணமேடு நோக்கி வந்து வந்து கொண்டிருந்த்து. இந்த லாரியை மண்ணச்சநல்லூர் எதுமலையைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்துள்ளார்.

அவருடன் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், வேலு, ஆகியோர் இருந்துள்ளனர்.இந்நிலையில் வாளாடி சிவன் கோயில் பகுதியில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்தனர்.அதற்கு லாரி ஓட்டுநர் தவிடு மூட்டை ஏற்றி செல்வதாக கூறினார்.இதில் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் லாரியை ஓரமாக நிறுத்த சொன்னார்.ஆனால் லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.உடனே சமயபுரம் காவல் ஆய்வாளர் லாரியை பின் தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் துரத்திதிற்கு விரட்டிச் சென்று லாரியை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் லாரியில் உள்ள மூட்டைகளை சோதனை செய்தபோது 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த 3 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்த சமயபுரம் போலீசார் குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேற்கொண்டு குடிமை பொருள் வழங்கள் துறை அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News