சிவகாசியில் நகை மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது !!

சிவகாசியில் நகை மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2024-05-23 07:26 GMT
கைது

சிவகாசியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் 15,427 கிராம் போலி நகைகளை அடகு வைத்து ரூ 7.5 கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர்,துணை மேலாளர், உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் ரஞ்சித்,இவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி,விருதுநகர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் 46 கிளைகள் இயங்கி வருகிறது.

இவர் மார்ச் 1ல் சிவகாசி கிளை வங்கியில் தணிக்கை செய்த போது,56 பேரின்126 நகை கடன் கணக்குகளில் உள்ள15,427 கிராம் தங்க நகைகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.

மேலும் விசாரணையில் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ள முத்துமணி என்பவரது உதவியுடன் துாத்துக்குடியை சேர்ந்த பாலசுந்தரம் போலி நகைகளை அடகு வைத்து ரூ7.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில் நகை கடை உரிமையாளர் பாலசுந்தரம்,நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில்,நகை மோசடி வழக்கில் வங்கி மேலாளர் பீகாரை சேர்ந்த குமார் அமரேஷ்,துணை மேலாளர் திருநெல்வேலி அரவிந்த்,உதவி மேலாளர் முகேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News