திருவேற்காட்டில் இளைஞரை வழிமறித்து வழிபறியில் ஈடுபட்ட 3 கொள்ளையன்கள்
திருவேற்காட்டில் இளைஞரை வழிமறித்து வழிபறியில் ஈடுபட்ட 3 கொள்ளையன்கள்;
By : King News 24x7
Update: 2024-03-31 13:58 GMT
வழிபறி
திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாசர் (19). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு நாசர் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,000/ பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து நாசர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நாசரிடம் வழிபறியில் ஈடுபட்டது அயனம்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (25), சக்தி (24), கிஷோர்குமார் (20) ஆகிய 3 கொள்ளையன்கள் என தெரியவந்தது இதையடுத்து தலைமறைவாக இருந்த மேற்கண்ட 3 கொள்ளையன்களை போலீஸார் நேற்று (மார்ச்.30) கைது செய்தனர். போலீஸார் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.