திருப்பூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை!
திருப்பூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளித்தனர்.;
Update: 2024-06-01 07:01 GMT
சிறை
கடலூர் மாவட்டம் சின்ன சீமக்கோட்டையை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர் திருப்பூர் இடுவம்பாளையத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு 15 வயது பள்ளி மாணவி தனியாக இருந்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்த்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. மாணவியை சில்மிஷம் செய்த ஆனந்த்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.