மதுரை ரயில் நிலையத்தில் 50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த பயணியிடம் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் - தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-01 06:33 GMT
மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த பயணியிடம் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் - தீவிர விசாரணை. நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்கானிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை ( DIRECTOR REVENUE INTELLGENGE ) அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்கானித்து வந்தனர். சென்னையில இருந்து - செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ்(42) ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் பின் தொடர்ந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கி பிடித்து இரண்டு போக்கையும் சோதனை செய்ததில் அதில் போதைபொருள் 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான என 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது. உடனே (DIR) DIRECTOR REVENUE INTELLGENGE அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில் நிலைய காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு 50 கோடி ரூபாய் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.