34,545 நபர்கள் குரூப்-4 தேர்வு எழுதினார்கள்

குரூப்-4 தேர்வை மாவட்டத்தில் 34,545 நபர்கள் தேர்வு எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் தகவல்;

Update: 2025-07-12 20:19 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் 163 தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு 34,545 நபர்கள் தேர்வு எழுதினார்கள். அதனை தொடர்ந்து, திண்டுக்கல் சின்னாளப்பட்டி தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேகம்பூர் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 163 தேர்வு மையங்களில் 34,545 நபர்கள் தேர்வு எழுதினார்கள். அதற்காக மொத்தம் 51 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படை பணியில் ஈடுபடுத்தபட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தன. தேர்வுகள் முடிந்து விடைதாள்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்தார்.

Similar News