கேரளாவுக்கு வேனில் கடத்திய 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கேரளாவுக்கு வேனில் கடத்திய 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-02-23 04:21 GMT
குமரி மாவட்டத்தில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணைண்ணெய் கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இனயம் பகுதியில் இருந்து ஒரு சொகுசு வேனில் மண்ணெண்ணெய் கேரளா கொண்டு செல்லப்படுவதாக நித்திரவிளை போலீருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார், ஏட்டு சவுதர் உள்ளிட்ட போலீசார் நித்திரவிளை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்களில் 350 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் வாகனத்தையும் மண்ணெண்ணெயும் பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.