முனி நாதபுரத்தில் 36 ஆம் ஆண்டு அன்னதான விழா

முனி நாதபுரத்தில் 36 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கமிட்டி சார்பில் அன்னதான விழா நடைபெற்றது.

Update: 2024-05-28 14:21 GMT

முனி நாதபுரத்தில் 36 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கமிட்டி சார்பில் அன்னதான விழா நடைபெற்றது. கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் நகரின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கினார். இதில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முனி நாதபுரம் பூச்செரிதல் விழா கமிட்டி சார்பாக 36 ஆம் ஆண்டு அன்னதான விழா நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் திருவுருவப்படத்திற்கு பூஜை செய்து பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

இந்த அன்னதானத்தில் தக்காளி சாதம், தயிர் சாதம், கேசரி மற்றும் தக்காளி தொக்கு ஆகியவற்றை அனைவருக்கும் அன்னதானமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முனி நாதபுரம் பூச்செரிதல் விழா கமிட்டி செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் முத்துக்குமார், அம்மூஸ் ஆப்டிகல் ராஜேந்திரன், பூஜா ஹோம் அப்ளையன்ஸ் உரிமையாளர் ஜாபர்சிங், ஜி பி ஆர் ஹார்டுவேர்ஸ் சிவசங்கர், பிரகாஷ் பிளாஸ்டிக் பாஸ்கர், ஆசிரியர் சுகுமார் உள்ளிட்ட விழா கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். பக்தர்களும் பொதுமக்களும் வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று உண்டனர்.

Tags:    

Similar News