கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 3-வது நாள் மலர் கண்காட்சி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொட்டும் மழையிலும் குடைகளை பிடித்து கொண்டு மலர்களை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ந்தனர்.
Update: 2024-05-19 13:42 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் 61-வது மலர் கண்காட்சி 3-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது, மலர்கண்காட்சிக்காக மலர்படுக்கையில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர்,மேரி கோல்டு ,பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா பூ வகைகள் பூத்து குலுங்குகின்றன மேலும் சேவல்,மயில்,வீடு,பொம்மை உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் அலங்கரிங்கப்பட்டுள்ளது,இந்த வண்ண வண்ண மலர்களையும்,மலர்களால் உருவாக்கப்பட்ட உருவங்களையும் சுற்றுலாப்பயணிகள் மழையினை பொருட்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகள் குடைகளை பிடித்து கொண்டும் மழையில் நனைந்தும் மலர்கண்காட்சியினை கண்டு ரசித்து வருகின்றனர், மேலும் கொட்டும் மழையில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்,மேலும் மலைப்பகுதியில் பனி மூட்டம் மற்றும் மழை பெய்து வருவதால் குளுமையான சூழல் நிலவி வருவதை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.