குமரி மாவட்டம் சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிகுமார் (36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். கொல்லங்கோடு காவல்நிலையத்தில் ரெஜிகுமார் மீது 4 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கிடையே இன்று காலையில் வீட்டின் அருகே உள்ள ஓடையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது கழுத்து பாதியில் கீறல் அடையாளம் இருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து ரெஜிமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெஜிகுமார் எப்படி இறந்தார்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவரது உடலில் உள்ள கீறல் அடையாளங்கள் பல்வேறு சத்தங்களை எழுப்பி இருக்கிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.