4-1- 25 அன்று மயிலாடுதுறை நகரில் ஒரு சில பகுதிகளில் மின் நிறுத்தம்
மயிலாடுதுறை துணை மின் நிலையம் பெசன்ட் நகர் உள்பட கச்சேரி சாலை வரை சனிக்கிழமை 4ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள மின் நிறுத்த அறிவிப்பு 110/33-11 கி.வாட் மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம் பெசன்ட் நகர், டவுன் ஸ்டேஷன் ரோடு, மயூரநாதர் ஆலய மேல வீதி' தெற்கு பட்டமங்கலம் தெரு, கச்சேரி சாலை உட்பட்ட மின்பாதை பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு 04-01-25 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. குறிப்பு:- அவ்வப்போது ஏற்படும் நிர்வாக காரணத்தை பொறுத்து மின்நிறுத்தம் தேதி மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.