கடையநல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது !
சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-19 04:54 GMT
தென்காசி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் புளியங்குடி எஸ்ஐ முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் இன்று இரவு ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்று போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கி (60) மாவடிக்கால் மாரியப்பன் (46), சுந்தரேசபுரம் காளிப்பாண்டி (39) மேலக் கடையநல்லூர் ராமர் (51) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.3570 பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.