கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது !

திருப்புவனம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Update: 2024-03-01 06:10 GMT
வாலிபர்கள் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடைபெறுவதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் கீழவெள்ளூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தேனி மாவட்டம் கூடலூர் எம்ஜிஆர் காலனி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், மதுரை பழைய சென்ட்ரல் மார்க்கெட் லயன் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மானாமதுரை செக்கடிதெரு பகுதியைச் சேர்ந்த குட்டை சங்கர் ஆகிய ஐந்து பேரும் காரில் விற்பனைகாக 24 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த வாகன சோதனையின் போது குட்டை சங்கர் என்பவர் தப்பி ஓடியுள்ளார். மீதமுள்ள நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்த 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒரு கார், 4 செல்போன், ஒரு மோடம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய குட்டை சங்கரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News