திருட்டு வழக்கில் கல்லுரி மாணவர் உட்பட 4 பேர் கைது !

ஊட்டியில் டிராக்டர் உதிரி பாகங்கள் திருடிய வழக்கில், கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது.

Update: 2024-02-23 15:35 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி முத்தோரை பாலடா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் 20 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். சொந்தமாக 6 டிராக்டர் வைத்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே டிராக்டர்கள் நிறுத்த இட வசதி இல்லாததால், முத்தோரை பாலாடா பஜார் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் டிராக்டர்களை நிறுத்தி செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த வாரம் இவருடைய டிராக்டரை முத்தோரை பாலாடா பஜாரில் நிறுத்திவிட்டு மறுநாள் வந்து பார்த்தபோது டிராக்டரில் உள்ள பிரண்ட் ஆங்கில், ட்ரெய்லர் டோர், ஏணி உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ், ஊட்டி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டிராக்டரில் உதிரி பாகங்கள் திருடியது ஊட்டி மேலூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (34) , சூர்யா (20), பூர்ண சந்திரன் என்ற சுபாஷ் (21) என்பதும், இதேபோல் இவர்கள் முத்தோரை பகுதியை சேர்ந்த நாகராஜ், செந்தில், மாதேஷ் ஆகியோரின் டிராக்டர்களிலும் உதிரிபாகங்களை திருடியதும் தெரிய வந்தது. இவர்களிடம் திருட்டுப் பொருட்களை வாங்கியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் உட்பட 4 நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுபோன்ற வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுபாஷ் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News