தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 4 பேர் கைது

சேலத்தில் தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-26 02:54 GMT

பைல் படம் 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த 14- ந் தேதி மதியம் தனது காரில் ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் ஒரு நிலத்தை வாங்குவதற்காக சென்றிருந்தார். இந்த காரை கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். மூர்த்தி அந்த நிலத்தை வாங்கவில்லை, இதையடுத்து அவர் அங்கிருந்து பல்லடம் செல்வதற்காக காரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பெங்களூரு-சேலம் சாலை ஏ.வி.ஆர். ரவுண்டானா பாலத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த 3 கார்கள் வேகமாக மூர்த்தியின் காரை மறித்து நின்றது. இந்த காரில் இருந்து 7 பேர் திடீரென இறங்கி வந்தனர். இதையடுத்து 7 பேரும் மூர்த்தியை கத்தியை காட்டி மிரட்டியதுடன், அவரை தாக்கி விட்டு அவர் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை பறித்து சென்று விட்டனர். இதில் மூர்த்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து மூர்த்தி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கேரளாவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் கேரளாவுக்கு சென்று 4 பேரை கைது செய்து சேலம் அழைத்துச் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News