இரணியல் அருகே திருட்டு மது விற்ற 4 பேர் கைது

இரணியல் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-12 05:15 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் குமார் உள்ளிட்ட போலீசார் இரணியல் காவல் நிலைய பகுதிகளில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.        அப்போது தலக்குளம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (46) என்பவர் சாக்கு முடையில் 23 மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அதேபோன்று திங்கள்நகர் பறையன்விளை  என்ற பகுதியில் நடந்த சோதனையில் வினோ (45) என்பவர் 10 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.    மேலும் ஆழ்வார்கோவில் பகுதியில் நடந்த சோதனையில் அப்பட்டு விளை, கணபதி நகரை சேர்ந்த மணிகண்டன் (41) என்பவர் 10 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததையும், களியங்காட்டில் நடந்த சோதனையில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (47) என்பவர் விற்பனைக்காக 7 மதுபாட்டில்களும் 3,500 ரூபாய் ரொக்க பணம் வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News