திருவிழாவில் தள்ளு முள்ளு: 4 பேர் கைது!

கே வி குப்பம் அருகே கோவில் திருவிழாவில் தள்ளுமுள்லில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-20 15:30 GMT

கோப்பு படம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி அடுத்த செஞ்சி கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் சிரசு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, கோவிலில் அலங்கரித்து வைத்திருந்த அம்மன் உடலில் பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான அமைதிக் குழுக்கூட்டம் சென்ற 17-ந் தேதி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் எஸ்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவிழாவை அமைதியான முறையில் நடத்தவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் பக்தர்கள் தண்டு மாலையுடன் கூட்டமாக கோவிலுக்குள் வந்தனர். அவர்களில் சிலர் விதிமுறைகளை மீறி, முகமூடி அணிந்தபடி கூட்டமாக வந்ததால், பக்தர்கள் உள்ளே வரவும், வெளியே வரவும் முடியாமல் நெரிசலில் சிக்கித் திணறினர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒருபகுதி கூட்டத்தினர் தள்ளியதில் நிலை தடுமாறிய சிலர், ஒரு பெண் மீது விழுந்துள்ளனர். சிலர் கூட்டத்தில் சிக்கி, மூச்சு திணறி, தப்பி, வெளியேறினர்.

இதுகுறித்து பனமடங்கி காவல் நிலையத்தில் தேவிகாபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில், பிரகாஷ் (42), சதீஷ்குமார் (28), லட்சுமணன் (24), நவீன் (24) ஆகிய 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார்.

Tags:    

Similar News