திருப்பைஞ்ஞீலியில் பெண் உள்ளிட்ட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
திருப்பைஞ்ஞீலியில் பெண் உள்பட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 05:13 GMT
அரிவாள் வெட்டு
திருப்பைஞ்ஞீலி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (70). இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தனது பேரன் திருமணத்துக்கு வந்த உறவினா்களுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவா்களிடம் தகராறு செய்துள்ளனா். இதனையடுத்து அங்கிருந்த விஜயா (50), ராஜேந்திரன் (45), ராமச்சந்திரன், நடராஜன் ஆகிய நான்கு பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது. உடனே, அருகில் இருந்தவா்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு மண்ணச்சநல்லூா் மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்து வந்த ஜீயபுரம் டி.எஸ்பி. பாலச்சந்தா், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரகுராமன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.