வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது!
திருமயம் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து புதுகை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Update: 2024-03-04 05:55 GMT
திருமயம் புதுகை மாவட்டம் அரிமளம், வல்லத்திரா கோட்டை, கீரனுார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அவர்கள் வழிப்பறி மற்றும் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணமேல்குடி தாலுகா வேதியங்கு டியை சேர்ந்த ஜீவா(24), காளிதாஸ்(20), அறந்தாங்கி எல்.என்.புரம் காந்தி நகரை சேர்ந்த ராஜசெல்வம் (17), தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் காலனியை சேர்ந்த சந்தோஷ்(22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் புதுகை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.