கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த 4 பேர் கைது
Update: 2023-12-14 07:09 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை- களத்துப்பட்டியில் கடந்த மாதம் 30-ம் தேதி முடிமலை ஆண்டவர் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. தொடர்ந்து கோவில்பட்டி கிராம மக்கள் திருவிழா கும்பிட முடிவு செய்தனர். இதற்கு களத்துபட்டியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் களத்துபட்டி கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இச்சம்பவம் தொடர்பாக களத்துப்பட்டியை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.