ஆத்தூர்: வீட்டிற்குள் புகுந்த டேங்கர் லாரி

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகில் ஒட்டுனர் மது போதையில் டேங்கர் லாரி சாலையின் ஓரம் உள்ள வீட்டிற்குள் புகுந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2024-05-09 03:30 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகில் வடக்கு தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்(50). இவர் நரசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந் நிலையில் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மணி விழுந்தான் காலனி பகுதியைச் சேர்ந்த அழகுதுறை என்பவர் சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அவர் அதிக அளவில் மது போதையில் இருந்து லாரியை ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகில் இருந்த நகராட்சி ஊழியர் செந்தில்குமார் வீட்டில் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் வீட்டில் மேற்கூரை உடைந்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார்(50) அவரது மனைவி மகன் மகள் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக விபத்தில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News