பேருந்தில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்தில் நூதன முறையில் 4 பவுன் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனா்.

Update: 2024-02-17 03:08 GMT

நகை திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்தில் நூதன முறையில் 4 பவுன் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் அ. கரிசல்குளம் தெற்கு தெருவை சோ்ந்தவா் மாடசாமி மனைவி செல்லம்மாள் (70). இவா் கரடி குளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு கோவில்பட்டி-கயத்தாறு அரசு நகர பேருந்தில் புதன்கிழமை ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தாராம்.

அவருக்கு அருகே இருந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க பெண், செல்லம்மாள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்த நிலையில் இருப்பதாக கூறினாராம். இதையடுத்து, அவா் தான் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி தனது கட்டப்பையில் வைத்துக்கொண்டாராம். இந்நிலையில், அந்தப் பெண் வில்லிசேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் மூதாட்டி தனது கட்டப்பையை பாா்த்தபோது அதில் வைத்திருந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம்.

இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News