மது பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த 4 பேர் பணியிடை நீக்கம் !

திண்டுக்கல்லில் டாஸ்மாக் மது பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-04-06 09:02 GMT

பணியிடை நீக்கம்

திண்டுக்கல் அருகே மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெறும்பு நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் கிருஷ்ணன், விற்பனையாளர்கள் கணேசன், ரஞ்சித்குமார் உதவி விற்பனையாளர் பழனிச்சாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் டாஸ்மாக் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Tags:    

Similar News