மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம் !

மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்.

Update: 2024-03-07 12:06 GMT

பஸ்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விடிய, விடிய நடைபெறும். இதை. முன்னிட்டு சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்கள் அதிகாலையில் இருந்து இரவு வரை இயக்கப்படும். இதேபோல் திருவண்ணாமலை மற்றும் கோவைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம் என்று சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News