கடந்த இரண்டு தினங்களில் 40,000 சுற்றுலாப்பயணிகள் வருகை
இரண்டு நாட்களில் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருகை புரிந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 7ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) முதல் இ-பாஸ் நடைமுறை அமுல் படுத்தப்பட்டது, இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வரை சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது,மேலும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் நுழைவாயில் சோதனை சாவடியில் சோதனை செய்த பின் வாகனங்களை அரசு அதிகாரிகள் கொடைக்கானல் நகருக்குள் அனுமதித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்றும், நேற்று முன்தினமேம் சுற்றுலாப்பயணிகளின் வருகையானது அதிகரித்து காணப்பட்டது, குறிப்பாக நேற்று மட்டும் 3371 வாகனங்களும், நேற்று 2000க்கும் மேற்பட்ட வாகனங்களும் நகர்ப்பகுதிக்குள் வருகை புரிந்துள்ளன,இதில் இரண்டு நாட்களில் 40,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்ததாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது, இதில் பேருந்துகள், மினி பேருந்துகள்,கார்கள்,இரு சக்கர வாகனங்கள் என்ற அடிப்படையில் கணக்கீடு செய்த்தாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது