41-வது வணிகர் தின ஆலோசனை பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 41-வது வணிகர் தின ஆலோசனை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-05 12:38 GMT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 41-வது வணிகர் தின ஆலோசனை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 41-வது வணிகர் தின ஆலோசனை பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் இமானுவேல் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.. இந்த ஆலோசனை பொதுக்குழு கூட்டத்தில் மே மாதம் ஐந்தாம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 41-வது வணிகர் தின மாநாடு நடத்துவதற்கு முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனை பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் மற்றும் வெள்ளையன் அவர்களின் மகனும் வணிகர் சங்கங்களின் பேரவை ஒருங்கிணைப்பாள ருமான டைமன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் கூறுகையில், வணிகர் சங்கம் பேரவை என்பது ஜாதி மதங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது எனவும், நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ மாட்டோம் கோரிக்கை வைத்து நடைபெறவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். அதேபோல வியாபாரிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கும் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் நான் கடிதம் அனுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News