45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள்,கற்பித்த ஆசிரியர்களை கவுரவித்து, ஒரே நிற உடை அணிந்து குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்..

45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள்,கற்பித்த ஆசிரியர்களை கவுரவித்து, ஒரே நிற உடை அணிந்து குழு புகைப்படம் எடுத்து பள்ளி நாட்கள் கதைகள் பேசி மகிழ்ந்தனர்...;

Update: 2025-10-27 15:55 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசினர் (அண்ணா சாலை) மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1980-81 கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 45 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக கூடி, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் 50ம் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒரே நிற உடையில் பங்கேற்று, தங்கள் பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து மனம் நிறைந்த உரையாடல்களில் ஈடுபட்டனர்.பழைய வகுப்பறைகளில் நடந்த இனிய சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டு, கடந்த கால நினைவுகளை புதுப்பித்தனர்.அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்தினர், அவர்களின் வழிகாட்டுதலுக்கும் பாசத்திற்கும் நன்றி தெரிவித்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறி இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக பேசி மகிழ்ந்தனர். மேலும் விரைவில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு சேவை நலத்திட்டங்களும் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உள்ளூர், மற்றும் வெளி மாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் இங்கு படித்த மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாணவர்கள் பேட்டியின் போது தெரிவித்ததாவது, “இன்று நாம் எல்லோரும் வாழ்க்கையில் வெவ்வேறு பாதையில் சென்றிருந்தாலும், இந்த பள்ளியே நம்மை உருவாக்கியது. மீண்டும் இங்கே வருவது பெருமையாக உள்ளது” எனக் கூறினர்.இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு, பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்த ஒரு உணர்ச்சி மிக்க நாளாக அமைந்தது என கூறினர்... இந்த நிகழ்வில் விழா விழா குழுவினர் கே. ஆர்டிஸ்ட் ஜான், ஆர்‌ பி. செல்வம், பி. ஈஸ்வரன், எஸ். சங்கரலிங்கம் ,எம். பாஸ்கரன், மற்றும் எஸ்.சுரேஷ் கண்ணா, எம். ரவி, வி.பாலாஜி, சி.சீனிவாசன், ஏ.ராஜு ,ஏ.சங்கர், கே. ஜான்சன், வடிவேல், மாதையன், சக்தி தாஸ், வாசுதேவன், உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News