தேனி மாவட்டத்தில் 455 வாகனங்கள் சிறைபிடிப்பு
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விதிமீறி இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-02-01 06:11 GMT
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விதிமீறி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் விதிமீறி இயக்கிய 3297 வாகனங்கள் கண்டறியப்பட்டதுடன் 455 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் வாகனங்களுக்கு அபராத வழியாக ரூபாய் 37.15 லட்சம் அபராத கட்டணமாக ரூபாய் 1.40 கோடி என மொத்தம் ரூபாய் 1.78 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்