ஈரோடு மாவட்டத்தில் 46 தானியங்கி மழைமானிகள்
ஈரோடு மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவினை கணக்கிட 46 தானியங்கி மழைமானிகள் , 2 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
Update: 2024-02-27 06:45 GMT
ஈரோடு மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவினை கணக்கிடும் புதிதாக 46 தானியங்கி மழைமானிகள் மற்றும் 02 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தானியங்கி மழைமானி மொடக்குறிச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஈரோடு , மொடக்குறிச்சி , கொடுமுடி , பவானி பகுதிகளில் தலா 3 , கோபிசெட்டிபாளையத்தில் 4 , சத்தியமங்கலத்தில் 10, அந்தியூர் , தாளவாடி , பெருந்துறை பகுதிகளில் தலா 6 , நம்பியூரில் 2 என மொத்தம் 46 புதிதாக தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படவுள்ளது. மேலும் தானியங்கி வானிலை மையம் மொடக்குறிச்சி , தாளவாடி என மொத்தம் 02 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படவுள்ளது.