மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி!
திருமயம் அருகே புலியமரத்தில் இருந்து கீழே விழுந்த கூலித்தொழிலாழி பரிதாபமாக உயிரிழந்தார்;
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 05:55 GMT
கோப்பு படம்
திருமயம்: கே.புதுப்பட்டியை அடுத்த கல் லுக்குடியிருப்பை சேர்ந்தவர் கருப்பையா (50) கூலித் தொழிலாளி. நேற்று காலை கீரணிப்பட்டி கண்மாய் கரையில் உள்ள மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது கால் தடு மாறி மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கருப்பையா (50) உயிரிழந்தார். இதுபற்றி கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.