திருப்பத்தூரில் வேலை நிறுத்த போராட்டத்தால் 49 சதவீத பேருந்துகள் இயக்கம்

திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் 49 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது

Update: 2024-01-09 09:26 GMT

திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் 49 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கம் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட விழுப்புரம் மற்றும் சேலம் பணிமனையின் 5.00 மணி முதல் 8:00 மணியின் நிலவரப்படி திருப்பத்தூர் மாவட்டம் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜன.9-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. வேலை நிறுத்தத்தை தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. 49 புறநகர் பகுதிகளிலும் 20 நகர் பகுதிகள் ஆகும் அதில் தற்போது புறநகர் 11 பேருந்துகள் மற்றும் நகர் 4 15பேருந்துகள் சென்றுள்ளது தற்போது வரை 25 பேருந்துகள் சென்று இருக்க வேண்டும் ஆனால் 15 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளது அதேபோல் விழுப்புரம் பணிமனையில் இருந்து மொத்தம் 119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன அதில் 95 பேருந்துகள் புறநகர் பகுதிகளிலும் 24 பேருந்துகள் நகர் பகுதியில் இயக்கப்படுகின்றன. அதில் தற்போது புறநகர் 14 பேருந்துகளும் நகர் பகுதியில் 3 இயக்கப்படுள்ளன மேலும் தற்போது வரை 48 பேருந்துகள் சென்றிருக்க வேண்டும் ஆனால் 17 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளது பேருந்துகள் இயக்கப்படாததன் காரணமாக பயணிகள் வெளியூர் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பேட்டி_மயில்வாகனம் AITUC மண்டல செயலாளர்
Tags:    

Similar News