5 குரங்குகளை பிடித்த வன ஊழியர்கள்

பூதப்பாண்டி;

Update: 2025-05-17 02:20 GMT
கன்னியாகுமரி வனக்கோட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட மருங்கூர் பகுதியில் கனகராஜ் என்பவர் குரங்குகள் தொல்லை தொடர்பாக வனத்துறையிடம் மனு அளித்தார். அதன் பேரில் மாவட்டவன அலுவலர் மற்றும் வன காப்பாளர் உத்தரவுப்படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையில் குரங்குகளை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு வனக்காப்பாளர் சிவராமன், வேட்டை தடுப்பு காவலர்கள் பிரவீன், ராஜா ஆகியோர் உதவியுடன் மேற்படி இடத்தினில் 5 நாட்டு குரங்குகள் பத்திரமாக பிடிக்கப்பட்டு வனச்சரக அலுவலர் உத்தரவுப்படி பொய்கை அணை வனப்பகுதியில் பிடிப்பட்ட குரங்குகளை பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

Similar News