5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு!
வீட்டில் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி சூப்பர் மார்க்கெட் தெருவில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரது வீட்டில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.