விருதுநகரில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி விருதுநகர் வழியாக நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 கிலோ தங்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-29 11:58 GMT

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் வாக்குக்கு பணம் அளிப்பதை தடுக்க பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகரில் சத்திர ரெட்டியபட்டி சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனத்தை கூடுதல் நிலைக் கண்காணிப்பு அலுவலர் இந்து மதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜேஷ், தலைமை காவலர் முனியராஜ், ஜெயக்கொடி ஆகியோர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்,

அதில் மதுரையில் உள்ள தனியார் ஏஜென்ஜி மூலம் ஐந்து கிலோ தங்க நகைகளை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜ், டெலிவரி அசிஸ்டண்ட் நரேஷ்பாலாஜி, பாதுகாப்புடன் நாகர்கோவிலில் உள்ள பல்வேறு தனியார் நகை கடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகளை கொண்டு சென்றது தெரிய வந்தது முறையான ஆவணங்கள் இன்றி தங்க நகைகள் கொண்டு வந்ததை அடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வட்டாட்சியர் நகைகள் குறித்து விசாரணை நடத்தியதில் உரிமையாளர்கள் உரிய ஆவணத்துடன் வந்தவுடன் ஒப்படைக்கப்படும் என பார்சல்கள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

Tags:    

Similar News