விசைத்தறி ஜவுளி வியாபாரியிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

சங்ககிரியில் விசைத்தறி ஜவுளி வியாபாரியிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-01 16:10 GMT

சங்ககிரியில் விசைத்தறி ஜவுளி வியாபாரியிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.


சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தர்கோவில் பகுதியில் விசைதறி ஜவுளி வியாபாரி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி சித்தர் கோவில் பகுதியில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை அலுவலர் ஜீவானந்தம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் வந்த முருங்கபட்டி பகுதியைச் சேர்ந்த விசைதறி ஜவுளி வியாபாரி சரவணன் என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் உதவி அலுவலரும் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரமான லோகநாயகியிடம் ஒப்படைத்தனர். விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சரவணன் உரிய ஆவணங்கள் சபரி பிரித்து பணத்தை திருப்பி பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News