கள்ளப்படகு விவகாரத்தில் 5 பேர் கைது !
இருந்து கள்ளப்படகு மூலம் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த நபரை அடைத்து வைத்திருந்த நபர்களுக்கும், அதே நேரத்தில் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை.
By : King 24x7 Angel
Update: 2024-03-26 05:19 GMT
இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூலம் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த நபரை அடைத்து வைத்திருந்த நபர்களுக்கும், அதே நேரத்தில் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் தண்டனையாக நீதிமன்றம் மூலம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. நாகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கை யாழ்பாணம் டான்போஸ்கோ மகன் ரமேஷ் (29) இவர் நாகை மாவட்டம், வேதாரணியம் உட்கோட்டம் நாலுவேதபதி பகுதியில் நுழைந்தார். இவ்வாறு சட்ட விரோதமாக நுழைந்த ரமேஷ் என்ற நபரை அதே பகுதியை சேர்ந்த நாலுவேதபதி சண்முகராஜ் மகன்கள் பிரபாகரன் (40) மகேஸ்வரன் (36) சுக்கிரன் மகன் வடிவேலு (40) த/மேலும் ஒரு சிறுவன் ஆகிய நான்கு நபரும் சட்டவிரோதமாக தனி கொட்டகையில் மறைத்து வைத்து தங்களது சொந்த வேலைகளை வாங்கி வந்ததாக வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்பு வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கானது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்திருந்த நிலையில் இன்று நாகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10,000 அபராதமும், மேலும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.