505 கிலோ தடை செய்யபட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
செட்டிபாளையத்தில் தடை செய்யபட்ட 505 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். கற்பகவாலா நகர் அருகே வாகன தணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ்(38)மற்றும் அல்வீர் சிங்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 5,00,000 மதிப்புள்ள 505 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்கள் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 693 நபர்கள் மீது 675 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 6395.625 கிலோகிராம் எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.